திருவள்ளூர் : தமிழகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா ரேஷன் அரிசி அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே பதுக்கி வைக்கப்பட்டு ஆந்திராவிற்கு கடத்தப்பட உள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது முட்புதரில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சுமார் 2650கிலோ ரேஷன் அரிசியை மீஞ்சூர் போலீசார் பறிமுதல் செய்து ரயில் மூலம் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற குமார் என்பவரை கைது செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு