வேலூர் : வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ராஜேஷ் கண்ணன், அவர்கள் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர் மற்றும் விற்பனை போன்ற செயல்கள் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் (15/11/ 2022),-ம் தேதி பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் திரு. ராஜன் பாபு, அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் குற்றவாளியின் வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் சோதனை செய்தபோது குற்றவாளி மணி கோட்டச்சேரி பேரணாம்பட்டு என்பவர் இரண்டு லாரி ட்யூபுகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 30 லிட்டர் விதம் ஆக மொத்தம் 60 லிட்டர் விஷ வாடையும் கூடிய நாட்டு சாராயம் பபதுக்கி வைத்திருந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்