தூத்துக்குடி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மேரி ஜெமிதா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. குணசேகரன் தலைமையிலான ஸ்ரீவைகுண்ட உட்கோட்ட தனிப்படை போலீசார் ஆகியோர் (10.01.2023) ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஏரல் வாழவல்லான் ரோட்டில் உள்ள முட்புதர் அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கூட்டாம்புளி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் முருகேசன் (40) என்பதும் அவர் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் குற்றவாளி முருகேசன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 404 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.