திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம் செய்யும் கடை ஊழியர்கள் மற்றும் கடைக்கு வரும் நபர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் முடி திருத்தம் செய்யும் பொருட்களை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி முடி திருத்தம் செய்ய வரும் நபர்களை உட்கார வைக்க வேண்டும். போன்ற கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும்படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா