தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (06.01.2022) தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி பொது இடங்களில் கொரோனா தொற்று பரவும் வகையில் கூட்டம் கூடிய 95 பேர் மீது வழக்குப் பதிவு – முக கவசம் அணியாத 1041 பேர் மீது நடவடிக்கை – அபராதம் ரூபாய் 2,08,200/-ம் – மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 4 பேர் மீது நடவடிக்கை – அபராதம் ரூபாய் 2000/- என மொத்தம் ரூபாய் 2,10,200/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொது இடங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு தலா ரூபாய் 200/- அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு தலா 500/- அபராதமும் விதிக்கப்படுகிறது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (06.01.2022) தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி பொது இடங்களில் கொரோனா தொற்று பரவும் வகையில் கூட்டம் கூடியவர்கள் 95 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (06.01.2022) பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 194 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 164 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 201 பேர் மீதும்,
ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 107 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 56 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 188 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 49 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 82 பேர் மீதும் என மொத்தம் 1041 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 2,08,200/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (06.01.2022) தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 3 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் ஒருவர் மீதும் என சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மொத்தம் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 2000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு மொத்தம் ரூபாய். 2,10,200/– அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.