சேலம்: கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு ஜீன் 14ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை தமிழக அரசு அமல் படுத்தியுள்ளது,
மேலும் பால், மருந்தகம், மளிகை, காயகறிகள், பெட்ரோல்பங்குகள், ஆட்டோக்களில் நடமாடும் காய்கறி, கறி கடை, மீன் கடைகள் மற்றும் மளிகை கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளின்றி இருசக்கர வாகனங்களில் தேவையின்றி ஊர் சுற்றுபவர்களுக்கு வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு அவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் முககவசம் அணியாமளும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவாகளுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர், இன்னிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் செல்ல தடை விதித்து போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே போலீசாரின் கண்களில் மண்ணை தூவியது போல் சிலர் இருசக்கர வாகனங்கலில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, மலலிய கரை ஆகிய பகுதிகலில் அத்தியாவசிய தேவையின்றி
ஊர் சுற்றுபவர்களுக்கு 500 ரூபாய் வீதம் 240 வாகனங்களுக்கு 1,20,000 மும், முக கவசம் அணியாமல் சென்ற 64 பேருக்கு 200 ரூபாய் வீதம் 12,400 ரூபாயும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத மூன்று நபர்களுக்கு 500 ரூபாய் வீதம் 1500 ரூபாயும் மொத்தம் 1,34,300 அபராதம் விதித்தனர், மேலும் 78 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து
வாகனங்களை பரிமுதல் செய்தனர், மேலும் அவர்களுக்கு தொற்று பாதிப்பு குறித்து போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.