தேனி மாவட்டம்
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.M.முத்துக்குமார் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் பெரியகுளம் உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முக கவசம் அணிந்து வந்த பொது மக்களை கௌரவிக்கும் விதமாக மரக்கன்று மற்றும் இனிப்பு வழங்கினர். முகக் கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு முககவசத்தின் அவசியத்தை எடுத்துக்கூறி முக கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்களிடம் கொடுத்து உறுதிமொழி எடுக்க செய்து கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தீவிரத்தை எடுத்துக்கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கொரோனோ வைரஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்த பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர்
திரு M.S.முத்துசாமி,இ.கா.ப., அவர்கள் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
மேலும் தேனி மாவட்டத்தில் கொரோனோ வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த காவல்துறையினர் எடுத்துவரும் நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது.