தூத்துக்குடி : தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நகர உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், மத்தியபாகம், முத்தையாபுரம், தாளமுத்துநகர், தெர்மல்நகர் மற்றும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முருகன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.