திருப்பூர் : திருப்பூர் வடக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கிளை நிர்வாகி அன்சாரி அவர்களின் தந்தை காஜா மைதீன் என்பவர் நேற்று முன்தினம் திருப்பூரில் ஒரு கம்பெனியில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக வீடு திரும்ப வில்லை.
இதை அறிந்த அவரின் மகன் அன்சாரி மற்றும் தமுமுக மமக நிர்வாகிகள் உடனடியாக அவர் பணிபுரியும் கம்பெனிக்கு சென்று பார்த்துபோது மரணம் அடைந்த நிலையில் இருந்தார். இது அறிந்து உடனடியாக. திருப்பூர் வடக்கு காவல் நிலைய காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டு பிறகு அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து பின்பு அவரின் உடல் நல்ல முறையில் அடக்கம் செய்யப்பட்டது.
திருப்பூர் வடக்கு காவல்துறை ஆய்வாளர் திரு. கணேஷ்சன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இது இயற்கை மரணம் இல்லை இதில் எதோ நடைப்பெற்று இருகிறது என்று சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்யப்பட்டு 18/11/2020 இன்று அந்த காஜாமைதீன் என்பவர் இயற்கையாக மரணிக்கவில்லை 4 நபர்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது விசாரணை மூலமாக தெரிய வந்தது.. அந்த கொலையை செய்த நான்கு குற்றவாளிகளை அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று அவர்களை கைது செய்து திருப்பூர் காவல் நிலையம் கொண்டுவரப்பட்டனர்.
கொலை நடந்த 60 மணி நேரத்தில் முறையான விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த ஆய்வாளர் திரு.கணேஷ்சன் மற்றும் காவல் துறையினரை பொதுமக்களுடன் சேர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனிதநேயமக்கள் கட்சியின் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளனர்.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்