கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் 24 மனை தெலுங்கு செட்டியார் திருமண மண்டபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர், உத்தரவின் பேரில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மனோகரன், தலைமையில் பர்கூர் கந்திகுப்பம். போச்சம்பள்ளி ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இம்முகாமில் பொதுமக்களிடம் 44 மனுக்கள் பெறப்பட்டு அதில் 36 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு மேலும் மீதமுள்ள மணுக்கள் நிலம் சம்பந்தமான சிவில் வழக்கு இருந்த நிலையில் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடிக் கொள்ள அறிவுருத்தப்பட்டது. இந்த முகாமில் காவல் உதவி ஆய்வாளர்கள் ரமேஷ் , பச்சமுத்து .சாந்தி .குமார். மும்தாஜ். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் செல்வம் தசரதன் மற்றும் காவல்துறையினர் கலந்த கொண்டனர்.
? கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்