விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (68), இவர் நகைகளை அடகு பிடித்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஜெயலட்சுமி அவரது வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சேவுகபாண்டியன் மனைவி தங்கேஸ்வரி (47) என்பவர், ஜெயலட்சுமி வைத்திருந்த ஒரு லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடுவதற்காக கொலை செய்தது தெரிந்தது. இதனையடுத்து தங்கேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், நகையை திருடுவதற்காக மூதாட்டி ஜெயலட்சுமியை கொலை செய்த குற்றவாளி தங்கேஸ்வரிக்கு, ஆயுள் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி