பெரம்பலூர்: இணையதளத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இணையதளத்தில் முகநூல் மூலம் நண்பரான நபர் ஒருவர் தனக்கு குறைந்த விலையில் செல்போன் மற்றும் மடிக்கணினி போன்றவற்றை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி தன்னிடமிருந்து பணம் ரூபாய் 1,85,000/-த்தை வங்கி கணக்கில் பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முரளி மகன் ரினேஷ் என்பவர் 19.01.2022-ம் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர். இணையதள யுக்திகளை பின்பற்றி தேடியதில் மேற்படி இணையதளத்தில் மோசடி செய்த நபர் பெங்களூரில் இருப்பதை அறிந்து சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி.கலா அவர்கள் தலைமையிலான குழுவினர் பெங்களூர் சென்று மேற்படி இணையதள குற்றத்தில் ஈடுபட்ட தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கிராமம் சின்னசாமி தெருவைச் சேர்ந்த உலகமுத்து மகன் ஜெகன் (29) என்பவரை கைது செய்தும் அவரிடமிருந்து செல்போன்கள்-2, செல்போன் சார்ஜர்-2, ATM Card-2 மற்றும் பணம் ரூபாய் 85000/- ஆகியவற்றை பறிமுதல் செய்தும், குற்றவாளியை தக்க வழிக்காவல் மூலம் பெரம்பலூர் அழைத்து வந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்கள்.
மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.