திருவண்ணாமலை: கொரோனா பெறுந்தொற்றின் 2-ம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில், ஆரணி நகர காவல் ஆய்வாளர் அவர்களின் வழிகாட்டுதல்படி, ஊரடங்கு காலகட்டத்தில்
மக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் சுற்றித் திரிய வேண்டாம். மேலும் அவசியமான தேவைகளுக்கு வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், சமூக இடைவெளி கடைப்பிடிப்பது கட்டாயம் என்றும் மற்றும் ஊரடங்கு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம் என்றும் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஆரணி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.மகேந்திரன் அவர்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்