திருவள்ளூர்: தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் அதிகரிக்கிறது. அதேவேளையில் இந்த வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை நம் காவல்துறையினர் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் பட்சத்தில், வழக்கமான கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மட்டும் போதாது. குறைந்தது 1 மீட்டர் சமூக இடைவெளியைப் பராமரிப்பது மட்டுமே சிறந்த பயனைத் தரும். கொரோனா வைரஸ் பாதிப்பைத் தவிர்க்க அடிக்கடி கைகளைக் கழுவுவது மற்றும் தூய்மையாக இருத்தல் அவசியம் என உலக சுகாதார மையம் கூறுகிறது. அதனையே நம் காவல்துறையினர் சமூக அக்கறையுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கொரானா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவருவதால் ஆட்டோக்களில் முககவசம் இன்றி யாரும் பயணம் செய்யக்கூடாது மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டிக்கர்களை ஆட்டோக்களில் ஒட்டி அறிவுரை வழங்கினர் பொன்னேரி காவல்துறையினர்
பொன்னேரி பழவேற்காடு சோழவரம் மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் சார்பில் கொரானா வைரஸ் தொற்று பரவல் தற்போது அதிகரித்து வரும் சூழலில், முகக் கவசங்கள் அணிந்து மட்டுமே பயணிகளை ஆட்டோக்களில் ஏற்றி செல்ல வேண்டும்.
விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவது குறித்து, தகவல்களை காவல்துறையினருக்கு தெரிவிப்பவர்கள், நம்பர் ரகசியமாக வைக்கப்படும் எனவும் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றக் கூடாது எனவும், சாலையில் ஓரமாக நிறுத்தி பயணிகளை ஏற்ற இறக்க வேண்டும் எனவும், போக்குவரத்திற்கு இடையூறாக ஆட்டோக்களை நிறுத்தக் கூடாது எனவும், ஆட்டோ ஓட்டுனர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி. கல்பனா தத் மற்றும் காவல் ஆய்வாளர் திரு. வெங்கடேசன் ஆகியோர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
பின்னர் ஆட்டோக்களில் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்