திருச்சி: முன்விரோதம் காரணமாக பெரம்பலூரை சேர்ந்த மீன் வியாபாரியை வெட்டி கொலை செய்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. கடந்த (29.10.2023)-ந்தேதி அதிகாலை 4.00 மணிக்கு உறையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குழுமணிரோட்டில் உள்ள மீன்மார்க்கெட்டிற்கு காரில் வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மீன் வியாபாரி ராமராஜ் என்பவரை முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மீன் மார்க்கெட் எதிரே உள்ள கண்ணாடி கடை அருகில் மேற்படி ராமராஜ் என்பவரை அரிவாளால் பின் தலையில் வெட்டி கொலை செய்துவிட்டு, குற்றவாளிகள் தப்பிசென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில், உறையூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, மேற்கண்ட வழக்கில் தொடர்புடைய எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த ரவுடி பிரபு (எ) பப்லு 40/24 த.பெ.ஜெயராஜ் மற்றும் 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ரவுடி பிரபு (எ) பப்லு என்பவர் மீது எ.புதூர் காவல் நிலையத்தில் கத்தியை காண்பித்து பணம் பறித்ததாக 3 வழக்குகளும், கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு, அமர்வு நீதிமன்றத்தில் ஆட்கடத்தில் ஈடுபட்டதாக ஒரு வழக்கு, திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலையத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக 1 வழக்கு என பல வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரியவருகிறது. எனவே, குற்றவாளி பிரபு (எ) பப்லு என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு உறையூர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி பாதுஷா (எ) பல்பு பாட்ஷா என்பவர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் ஆணையின்படி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.