திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் கடந்த 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நங்கூரம் பழவேற்காடு என்ற பெயரில் மீனவ இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் நடந்த முகாமில் 19 நிறுவனங்கள் கலந்து கொண்டு நேர்காணல் செய்தனர். இதில் வேலை தேடும் 532 இளைஞர்கள் பங்கேற்றனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 228 பேருக்கு பணி நியமன ஆணை மற்றும் 59பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஆணை வழங்கும் விழா பழவேற்காட்டில் நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், திருவள்ளூர் எம்.பி., ஜெயக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் துரை.சந்திரசேகர், டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி குழுதலைவர் உமாமகேஸ்வரி,
பொன்னேரி சப்–கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த், தாசில்தார் மதிவாணன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு