இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் மாநிலக் கட்சியான திமுக மாறியுள்ளது. தேசிய அளவில் 3வது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதற்கு மெருகேற்றும் வகையில் தி.மு.க கட்சியின் சாதனைகளை இந்திய அரசியலை அதிரவைக்க பிரம்மாண்டமாக தி ரைசிங் சன் இதழ் வெளிவர உள்ளது.
கழகத்தின் அதிகாரப்பூர்வ ஆங்கில நாளேடான ‘தி ரைசிங் சன்’ , இன்று 26ஆம் தேதி மாலை 7 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் வெளியிடப்படவுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.
தமிழக முதலமைச்சர் தி ரை சிங் சன் ஆசிரியரை சரியாக தேர்வு செய்து உள்ளார் முதல்வர். பேராசிரியர் திரு.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்,M.E, MBA, MCA, LLB, Ph.D அவர்கள் இந்தப் பதவிக்கு பொருத்தமானவர்.நல்ல அறமும் அறிவாற்றலும் கொண்ட ஒரு நல்ல ஆசிரியர். நல்ல பண்பும், குணமும் கொண்ட திரு.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் கழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் வெளியிட்டு அச்சிடுபவர் திரு.உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களும் இந்தப் பதவியை அளித்து அழகுபடுத்தியுள்ளார். கழகத்தின் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
பிற மாநிலத்தவர் திமுகவின் சமூக நீதி, இருமொழிக் கொள்கை உள்ளிட்ட கருத்துகளை அறிந்து கொள்ள கடந்த 1971ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கில் ‘தி ரைசிங் சன்’ எனும் ஆங்கில நாளேடு தொடங்கப்பட்டது.
கலைஞர் ஆணைக்கு இணங்க, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு.முரசொலி மாறனை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட அந்த ஆங்கில வார இதழ், பல்வேறு காரணங்களால் 1975ஆம் ஆண்டில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு, 2005ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அப்போதைய திமுக தலைவரான கருணாநிதி அவர்களால் மீண்டும் ‘தி ரைசிங் சன்’ வெளியிடப்பட்டு பின்னர் மீண்டும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், 10 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. திமுகவின் கொள்கைகளை, வெளிநாட்டினர் அறிந்து கொள்ளும் வகையில், திமுக கட்சியின் ஆங்கில நாளேடான ‘தி ரைசிங் சன்’-க்கு கழக தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் மீண்டும் வெளியிட உள்ளார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்