சென்னை: சென்னை பெருநகர காவல்துறை பொறுப்பை இரண்டாக பிரிக்கப்பட்டு புறநகர் காவல்துறை ஆணையர் அலுவலகம் தனியாக அமையவிருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
சென்னை பெருநகர் காவல் துறையில் மொத்தம் 130 காவல் நிலையங்கள் உள்ளன. 12 காவல் மாவட்டங்களில் மொத்தம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிகின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் திரு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னை சென்னை புறநகர்கென தனி காவல் ஆணையர் அலுவலகம் அமைக்கப்பட்டது. மீண்டும் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்த பிறகு ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா பிரிக்கப்பட்ட காவல்துறை ஆணையர் அலுவலகங்களை மீண்டும் ஒன்றாக இணைந்த இணைந்தார்.
இந்நிலையில் மும்பை, நேவி மும்பை, தானே, ஹைதராபாத் நகரங்களை போன்றே வி.வி.ஐ.பி பாதுகாப்பு மற்றும் நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் அதிக அதிகரிக்க, சென்னையில் புறநகர் கமிஷனர் அலுவலகம் மீண்டும் அமையவுள்ளது.
இதன் தலைமையகம் பரங்கிமலையில் அமையும் என்று தகவல் கூறுகிறது. கமிஷனர் அலுவலகங்களுக்கான போலீசார் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், நிதி ஒதுக்கீடு குறித்த விபரங்கள், விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை விமான நிலையம், இந்திய ராணுவ பயிற்சி மையம் மற்றும் தாம்பரம் விமானப்படை நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் காவல் ஆணையர் அலுவலக பாதுகாப்பு வழங்கும் என்று தெரிகிறது. மாநில எல்லைகள் மற்றும் மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட எல்லைகள் சட்ட விரோத நடவடிக்கைகளை தவிர்க்கும் பொருட்டு புறநகர் ஆணையர் அலுவலகம் உள்ளதாக கூறப்படுகிறது.
அம்பத்தூர் மாதவரம் நீங்களாக புறநகர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட தாம்பரம் மற்றும் பூந்தமல்லி காவல் மாவட்ட கலர் புதிதாக உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.