திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே வாகனங்கள் கடப்பதற்கு ஒரு ரயில்வே கேட் உள்ளது . இந்த ரயில்வே கேட் வழியாக 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம் இதற்கிடையே சுமார் 10 வருடங்களாக பாலம் அமைப்பதற்காக இங்கு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுவரை பாலம் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த ரயில்வே கேட்டை கடக்கும் இருசக்கர வாகனங்கள் அவசர அவசரமாக கேட் மூடி இருந்தாலும் அதன் உள்ளே புகுந்து சென்று ரயில்வே கேட்டை கடப்பது இங்கு உள்ளவர்களுக்கு வாடிக்கை. அப்படி இன்று காமராஜர் துறைமுகத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்யும் சின்னசாமி (55), தந்தையின் பெயர் சுப்புராமன் தேனி மாவட்டம், கொம்பை ரோடு உத்தமபாளையம் சேர்ந்த சின்னசாமி பணி முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது மூடிய கேட்டை கடத்ததால் சம்பவ இடத்திலேயே ரயில் மோதி சின்னசாமி மரணம் அடைந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு