திருவள்ளூர் : திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் பேரூர் கழக சார்பில் மீஞ்சூர் பஜாரில் அதிமுக சார்பில் விடியாத தி.மு.க அரசு உயர்த்திய பால் , சொத்து வரி ,மின் கட்டண உயர்வு கண்டித்தும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் மற்றும் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் பட்டாபிராமன் தலைமையில் மீஞ்சூர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்போது விடியாத தி.மு.க அரசுக்கு எதிராக கண்டன முழுங்கங்கள் ஏழுப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் முன்னாள் MLA பொன் ராஜா எம்.ஜி.ஆர், இளைஞராணி செயலாளர் பானுபிரசாத் , ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மாவட்ட மாணவரனி செயலாளர் ராகேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு விடியா திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் ஊராட்சி கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு