திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதி வெளிவட்ட சாலை முதல் திருவெற்றியூர் நெடுஞ்சாலை வரை உள்ள சாலையை செப்பனிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) சார்பில் சாலை மறியல் போராட்டம் மீஞ்சூர் BDO அருகில் நடைபெற்றது. 60 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வருவாய் துறை ஆய்வாளர் அவர்களுடனும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் வரும் (02.01.2023) தேதியில் சாலையை செப்பனிடும் பணியை தொடங்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போரட்டம் நிறைவு பெற்றது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு