திருவள்ளூர் : மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் மீஞ்சூர் பஜார் வீதி அத்திப்பட்டு, அத்திப்பட்டு புது நகர் பகுதிகளில் ஆய்வு செய்து போலீஸ் பூத்களை பார்வையிட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அதிக குற்ற சம்பவங்கள் நடக்கும் இடங்களை பார்வையிட்டு நகர் முழுவதும் தெருக்களில் முக்கியமான வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் காவலர்களை ரோந்து பணியில் ஈடுபடவும், அறிவுறுத்தி, போக்குவரத்து நெரிசல் இடங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கவும் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழவேற்காடு மீஞ்சூர் நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் மாடுகள் காணப்படுவதால் அதிகமாக விபத்துக்கள் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் , மாட்டின் உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின்போது துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் உதவி ஆணையர் ராஜராபர்ட் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளிதாஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு