திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய நந்தியம்பாக்கம் ஊராட்சியில்,மீஞ்சூர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரே நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன் தலைமை வகித்தார்,துணை தலைவர் எம்.கலாவதி, வார்டு உறுப்பினர்கள் காதர்பாஷா, தினேஷ், வாணி, புஷ்பராஜ், வேங்கடநாதன்,வள்ளி, உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர், இதில் சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் சிரஞ்சீவி கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரவு வேலையில் பெண்களின் பாதுகாப்பு முக்கியம், பொதுமக்கள் உறங்கும் பொழுது கதவினை தாழிட்டு பாதுகாப்பாக உறங்க வேண்டும், விசேஷ நேரங்களில் தங்க நகைகளை அணிந்து செல்லும் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக செல்ல வேண்டும் எனவும், திருட்டுகளை ஒழிக்க சந்தேகபடும்படி நபர்கள் தெருக்களில் திரிந்தால் உடனே காவல்துறைக்கு புகார் அளிக்க வேண்டும்,என பேசினார்,நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் சுரேஷ், காவலர் சுரேஷ்குமார், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு