திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் எல்லைக்குட்பட்ட செங்குன்றம் சரகம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா ஆய்வாளர் வேலுமணி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது காவல் நிலையத்தின் முன்பு வண்ணக் கோலங்கலுடன் இனிப்பான கரும்புகளுடன் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் இட்டு காவல்துறையினர் மகிழ்ந்தனர் ,அதனைத் தொடர்ந்து ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ஒருவரோடு ஒருவர் புத்தாடை அணிந்து பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் இதில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசுகளும் வழங்கப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு