திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை யின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் மீஞ்சூர் தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மீஞ்சூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர், மீஞ்சூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கர்பிணி தாய்மார்களுக்கு வாழ்த்து தெரிவித்து வளைகாப்பு நடத்தினர்.
நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்துள்ள உணவுபொருட்களும், பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பொருட்களும், குழந்தைக்கான ஊட்டச்சத்து பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டு அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அந்த ஊட்டச்சத்து உணவுகள் அனைவரும் வழங்கப்பட்டது. இதில் மீஞ்சூர் வட்டார மருத்துவமனை மருத்துவர் சுரபி,வார்டு கவுன்சிலர்கள் சுமதி தமிழ் உதயன், அபூபக்கர், சமூக ஆர்வலர் குருசாலமன், வட்டார மேற்பார்வையாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு
















