திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் ஆறுமுகசாமி முருகன் சன்னதியில் இன்று 48 வது ஆண்டு வைகாசி விசாக திருவிழா வெகு விமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது. இதை ஒட்டி முருகனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து இன்று பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்து முருகனை வழிபட வேண்டி மீஞ்சூர் நான்கு சன்னதி தெருக்களில் சுற்றி வந்து அரோகரா அரோகரா என்று கோஷமிட்டு முருகன் அருள் பெற்றனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆண் பெண் சிறுவர்கள் குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி திருவீதி உலா வந்ததை பெருந்திரளான மக்கள் பார்த்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு