திருவள்ளூர் : திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வணிகர்கள் சார்பாக தமிழ்நாடு வணிகர்கள் சங்கத்தினர் பேரமைப்பு கல்வெட்டு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் திரு.டி.நந்தன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் திரு.ராதாகிருஷ்ணன் , திரு.கேசவன், முன்னிலை வகித்தனர். மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவரும் சங்கத்தின் துணைத் தலைவருமான திரு.பா. அலெக்சாண்டர் , திரு.அபூபக்கர், ஆகியோர் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் திரு.ஏ. எம். விக்ரமராஜா கலந்துகொண்டு சங்கத்தின் கொடி ஏற்றி கல்வெட்டு திறந்து வைத்தார். பின்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் வணிகர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்து தீர்வுகளை எடுத்துரைத்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை திரும்ப பெற வலியுறுத்தியும், வணிகவரித்துறை அதிகாரிகள் அத்துமீறலை கண்டித்தும் கடந்த வாரம் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரிகளிடம் கொடுத்துள்ளதாகவும், அமைச்சரை சந்தித்து தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சி மண்டல தலைவர் திரு.அமல்ராஜ், திரு.பாண்டியராஜன், தலைவர் திரு.ஏ.கே.சுரேஷ், மீஞ்சூர் தலைவர் திரு.ஏ.சி. இராஜேந்திரன் முகமது அலி, திரு.ராஜேந்திரகுமார், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், திமுக நகர செயலாளர் க.சு.தமிழ்உதயன், சங்கத்தின் துணைத் தலைவர்கள் ராஜன், வேல்ராஜ் , பாபு (எ)அஜிஸ் துணை செயலாளர்கள் ரியாஸ் அகமது, பாலசுப்பிரமணி, எழிலரசன், ஷாயின்ஷா, ஒருங்கிணைப்பாளர்கள் கதிர்வேலு, கணேஷ் குமார், நாராயணன், சட்ட ஆலோசகர்கள் நித்தியகுமார், சுதாகர், மனோ, கணேஷ்,மற்றும் மீஞ்சூர் அனைத்து வணிகர்களின் பேரமைப்பு சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு