திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் காலம் காலமாக மழைக்காலங்களில் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து மழை மற்றும் வெள்ளநீர் ரயில் நிலையம் அருகே கொங்கு அம்மன் நகர் பகுதியாக தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளதால் மழைக் காலங்களில் அங்கு குடியிருப்போர் பெரிதும் அவதிப்படுகின்றனர் .இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவி கலாவதி, துணைத் தலைவர் ,வார்டு உறுப்பினர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர் .அக்கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி நேற்று திருவள்ளூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ராஜ்குமார் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவி கலாவதி எந்த வழியாக தண்ணீர் வருகிறது. எந்த பக்கம் அகற்ற வேண்டும் என்று விவரம் கேட்டு அறிந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார் .அவருடன் பொன்னேரி தாசில்தார் மதிவாணன், பொன்னேரி வருவாய் ஆய்வாளர் புருஷோத்தமன், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி மண்டல அலுவலர் லோகநாதன், கிராம நிர்வாக அலுவலர்கள் அம்சா, ஜாஸ்மின், வார்டு உறுப்பினர் வள்ளி விஸ்வநாதன் ,ஊராட்சி செயலர் பொற்கொடி மற்றும் கிராம நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர் .
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு