திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மருத்துவர்கள் சுகாதார ஆய்வாளர்கள் என பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது மருத்துவர் நிரஞ்சன் மற்றும் சக மருத்துவர் டேவிஸ் செந்தில் ஆகிய இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின் இது மோதலில் ஆரம்பித்து கைகலப்பில் முடிந்தது. கையில் கிடைத்ததை எடுத்து அடித்துக் கொண்டதில் மருத்துவர் நிரஞ்சனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த கரையுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீஞ்சூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார் இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி செய்யும் பணியாளர்கள் மருத்துவர் டேவிஸ் செந்திலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு