திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி குப்பைகளை அகற்றுவதற்கு கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் 7 பேட்டரி வாகனங்களை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு வரவேற்பு அளித்தார். மீஞ்சூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அலெக்சாண்டர் முன்னில வகித்தார். மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை தாங்கி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதே போன்று மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 8-வது வார்டு பகுதியில் மாநில நிதி ஆணையத்தின் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஏற்பாட்டினை 8-வார்டு கவுன்சிலர் குமாரி புகழேந்தி சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத்தலைவர் அலெக்சாண்டர், மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு. தமிழ் உதயன், ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கே.சுப்பிரமணி தி.மு.க அவைத்தலைவர் ராஜேந்திரன் ,முன்னாள் பேரூர் கழக செயலாளர் நா. மோகன்ராஜ், திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ப.கருணாகரன், மீஞ்சூர் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் சுகன்யா வெங்கடேசன், கவிதா சங்கர், சங்கீதா சேகர், பரிமளா அருண்குமார், ஜெயலட்சுமி ஜெய்சங்கர், ஜெயலட்சுமி தன்ராஜ், நக்கீரன், அபூபக்கர் , ராஜன், ஒப்பந்ததாரர்கள் இளங்கோவன், உதயகுமார், ஆந்திரா ரமேஷ், மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சி முடிவில் வருகை தந்த அனைவருக்கும் பேரூராட்சி மேற்பார்வையாளர் கோபி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு