திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி, மான்டஸ் புயலினால் மீஞ்சூர் பொன்னேரி பழவேற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்த நிலையில் உடனடியாக பேரூராட்சி நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. நேற்று மாலை வரை மின்சாரம் தடைப்பட்டிருந்ததால் குடிநீர் கேன் அதிக விலை கொடுத்து வாங்கியும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மீஞ்சூர் அடுத்த பட்ட மந்திரி திருவிக தெருவில் வாழ்ந்து வந்த சுசிலா என்பவருது வீட்டில் உள்ள 40 வருட பழமை வாய்ந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்து ஓடு வீட்டின் மேல் விழுந்ததில் சுசிலா உட்பட ஐந்து பேர் வெளியே வர முடியாமல் கூச்சலிட்டனர்.
உடனடியாக பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்பு துறை அதிகாரி சம்பத் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரம் அறுக்கும் இயந்திரத்தினால் மரங்களை அறுத்து அப்புறப்படுத்தி 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக ஐந்து நபர்களை மீட்டனர். இதேபோன்று அருகில் இயேசு குமார் வீட்டில் மேல் தளத்தில் பனைமரம் வேரோடு சரிந்து விழுந்தது தீயணைப்பு துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர் . பழவேற்காடு,கூனங்குப்பம், குளத்து மேடு, சோமஞ்சேரி, ஏலியம்பேடு,, கனகம் பாக்கம், பகுதிகளில் புயலினால் இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் சேதமான வீடுகளை பொன்னேரி MLA திரு. துரை சந்திரசேகர், தாசில்தார் செல்வகுமார் பார்வையிட்டு, உணவு மற்றும் உடைகளை வழங்கினர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்