மனித உடலில் ஊடுருவிச் சென்று உடன் உயிரை கொல்லும் கொரோனாவை மருத்துவர்கள் தடுத்து உயிரை பாதுகாக்க போராடுவது போல் பாரத தேசத்தின் எல்லை பகுதிகளில் ஊடுருவும் அன்னிய நாட்டின் எதிரிகளை சுட்டெரிக்கும் சூரியனாக இரவு பகல் பாராது , பனி ,மழை , வெயில் என எக் காலத்திலும் தன் நாட்டு மக்களுக்காக உறவுகளை பிரிந்து ,உணர்வுகளை மறந்து தன்னுயிர் தரவும் துணிந்து எல்லைச்சாமியாக நம்மை காத்து நிற்கும் , எதிரிகளை தடுத்து எதிர்த்து நிற்கும் நம் நாட்டு ராணுவ வீரர்களுக்கும்,
அதேபோல் உள் நாட்டில் வாழும் மக்களுக்காக நாட்டில் நடக்கும் குற்றங்களை அடக்கி ஆள்வதில் சுடர்மிகு சூரியனாக வலம் வந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வண்ணம் இரவு ,பகல் பாராமல் பணியாற்றி வரும் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் எங்கள் குலச்சாமியான தமிழக காவல் துறையினருக்கும்,
மண்ணில் நடமாடும் சந்திரன் போல் தூய வெண்ணிற ஆடைகளை அணிந்து மக்களுக்கு தங்களுடைய சுகதுக்கங்களை மறந்து உலகை காக்கும் கடவுளாக கொரோனா எனும் கொடிய தொற்றினால் நாட்டில் கொத்துக் கொத்தாக போகும் மனித உயிர் பலிகளை தடுக்கப் போராடி அவ்வுயிர்களை மீட்டெடுக்கும் பணியில் தன் உயிரையும் தியாகம் செய்து வரும் நம் நாட்டு மருத்துவர்கள் ,செவிலியர்கள்,மருத்துவ துறை சார்ந்த பணியாளர்களையும்,
உடலில் நோய் உருவாக காரணம் சுகாதாரமற்ற வாழ்வியல் அதனை நெறி படுத்தும் பணியான நகர தூய்மை பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு கொரோனா போல் பல வித தொற்றுக்களை எதிர் கொண்டு நம் வீசி எறியும் குப்பைகளை எந்த ஒரு அருவருப்பும் இன்றி தினசரி சுத்தப்படுத்தி சுகாதாரத்துடன் பொதுமக்கள் வாழ நாட்டின் நலன் காக்கும் துப்பரவு பணியாளர்கள் ,மற்றும் அத்துறை சார்ந்தவர்களையும்,
பாராட்ட வார்த்தைகள் இல்லை என்றுச் சொன்னால் அது மிகையாகாது.
கொரோனா தொற்றின் வீரியம் குறைய பாடுபடும்
விண்ணில் ஒளி சிந்தி வலம் வரும் சந்திரன் ,சூரியன் போல் மண்ணில் தன்னலம் கருதாமல் தன்னுயிரினும் மேலாக கருதி வாழும் மக்களை காக்கும் மகத்துவமான பணிகளான எல்லையை காக்கும் பணி , நாட்டைகாக்கும் காவல் பணிமருத்துவப் பணி , துப்பரவுபணி பணியை திறம் பட செயலாற்றி வரும் சீறுடை பணியாளர்கள் அனைவரின் பணியினை போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் ராயல் சல்யூட்டுடன் பாராட்டி மகிழ்கிறது.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்