திருவாரூர் : பரவாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உள்ளிக்கோட்டை பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வரும் நபர் மற்றும் அவரது மனைவியை ஆபாசமாக திட்டி, கையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்து ரூபாய்.23,10,000/-ஐ மிரட்டி வாங்கிய – உள்ளிக்கோட்டை, மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பாலைய்யா தேவர் மகன் பொய்யாமொழி (வயது-55). என்ற HS குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, இவர் மீது அடிதடி, கொலை, கொள்ளை, திருட்டு என 21 வழக்குகள் உள்ளது. கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் 3 மாதத்திற்கு முன்னர் தான் வெளியே வந்துள்ளதும் விசாரணையில் தெரிகிறது.
சிறப்பாக செயல்பட்டு கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த HS குற்றவாளியை கைது செய்த பரவாக்கோட்டை காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் திருமதி.சுகந்தி மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc,(Agri)., அவர்கள் பாராட்டினார்கள்.பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.