திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி ஐந்தாவது வார்டு ஜெக ஜீவிராமன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜா, இவரது மனைவி லாவண்யா (32). இவரும், உறவினரான கார்த்திக் என்பவரது நான்கு வயது மகள் சிட்டு என்பவர்களும், நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டின் அருகே, அமர்ந்திருந்தனர். அப்பொழுது திடீரென இவர்களுக்கு எதிரே இருந்த மின்கம்பம் மின்சாரத்துடன் உடைந்து இருவரின் மீதும் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் லாவண்யாவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டு அலறினார், குழந்தை சிட்டு அதே இடத்தில் மயக்கமுற்ற நிலையில் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மின் கம்பம் உடைந்த பொழுது உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர், இச்சம்பவம் மின்வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் காட்டூர் செல்லும் சாலையில் 50க்கும் மேற்பட்டோர் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீஞ்சூர் காவல் நிலைய போலீசார் மற்றும் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர், வார்டு உறுப்பினர் தன்ராஜ், உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் மின் ஒயர்கள் மின் கம்பங்கள் அனைத்தையும் சீர் செய்து தருவதாக உறுதியளித்தின் பேரில், அனைவரும் கலந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு