திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நார்த்தாங்குடி பிரிவு சாலை (நான்கு வழிச்சாலை) அருகே அதிக விபத்துகள் நடைபெறுவது குறித்து ஆய்வு செய்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள், விபத்தை தடுக்க அப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்கை விளக்குகள் அமைக்க ONGC நிறுவன அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்கள்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் சீரிய முயற்சி மற்றும் தொடர் நடவடிக்கையால், நார்த்தாங்குடி பிரிவு சாலை (நான்கு வழிச்சாலை) அருகே சுமார் 10-இலட்சம் மதிப்பிலான உயர்கோபுர மின்விளக்குகள்-2 மற்றும் தானியங்கி போக்குவரத்து சமிக்கை விளக்குகள்-4 அமைக்கப்பட்டு (01.08.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது. இவ்விழாவிற்கு வந்த பொதுமக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் விபத்துக்களை தவிர்க்க அனைவரும் கட்டாயம் போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.