திருவள்ளூர்: தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம், பழவேற்காடு உதவி பொறியாளர் மின்னகம் மற்றும் மின்நுகர்வோர் சேவை மையம் சார்பில் மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் உள்ள புலிகட் நேஷ்னல் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பொன்னேரி(மேற்கு) உதவிசெயற்பொறியாளர் சிவசங்கரன் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் குமாரி ஸ்ரீஜா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில்
பழவேற்காடு உதவி பொறியாளர் பிரேம் சுகுனேஷ் வரவேற்க, பொன்னேரி செயற்பொறியாளர் பாண்டியன் சிறப்புரையாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் இதில் ஆர்வமாக பங்கேற்று மின்சாரத்தினால் ஏற்படும் நன்மை மற்றும் விபத்துக்கள் குறித்து தெரிந்து கொண்டனர். விபத்து நேரத்தில் எவ்வாறு தற்காத்துக் கொள்வது பிறரை காப்பாற்றுவது என்பது குறித்த நுணுக்கங்களையும் அறிந்து கொண்டனர். அதிகாரிகளிடம் தங்களுக்கு உண்டான கேள்விகளை கேட்டு ஐயங்களை தீர்த்துக் கொண்ட நிகழ்ச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பாளர் பி.எஸ்.பழனியப்பன் நன்றியுரையாற்றினார்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், பழவேற்காடு மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நிகழ்ச்சி பங்களிப்பு செய்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு