செங்கல்பட்டு: புத்தர் ஒளி பன்னாட்டு பேரவை தமிழ்நாடு கிளையின் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் இருந்து ஆரம்பித்து, அரசு மருத்துவமனை, புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வித்தியாசகர் மகளிர் கல்லூரி வழியாக, மாரத்தான் பங்கேற்பளர்கள் 5 கிலோமீட்டர் தூரம் ஓடி, வெண்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் நிறைவுற்றது. இதில் செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர் திரு.அரிஹரன் அவர்கள் கொடியசைத்து துவங்கிவைக்க மாவட்ட கல்வி அலுவலர் திரு.ரவிச்சந்திரன், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் திரு.கிள்ளிவளவன், ஜீவன் மருத்துவமனை சேர்மன் மருத்துவர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில்
புத்தர் ஒளி பன்னாட்டு பேரவையின் மூத்த ஆலோசகர்கள், திரு.அன்பன், திரு.வீரமணி, துணைத்தலைவர் திருமதி .மலர்கொடி, திரு.அம்பேத்ஆனந்த் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
இந்த மினி மாரத்தான் ஐந்து கிலோமீட்டர் தூரத்தை (13 -15) வயது,(16-20), மற்றும் 20க்கும் மேற்பட்ட வயதுடையோர் என்ற பிரிவுகளில் வெஜ்ரன், நடைபெற்றது. இதில் சூரியா, சுஜிதா, சரவணன் ஆகியோர் முதலிடமும்,7பேர் 2ஆம் இடமும், மூன்றாம் இடத்தையும் பிடித்து கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை பெற்றனர். மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு சிறக்க சென்னை அண்ணா நகர் சென்டனியல் அரிமா சங்கம், சிட்லபாக்கம் ரோஸ்லி மெட்ரிக் பள்ளி, செங்கல்பட்டு ஜாய்சன் கம்பெனி மற்றும் பல்வேறு தரப்பினரும் உறுதுணையாக இருந்தனர். ஜீவன் மருத்துவமனை ஆம்புலன்ஸ், தாகூர் மருத்துவ கல்லூரி, பிஸியோதரப்பி தீபன்குழுவினர், செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சாரணீய மாணவிகளும், தமிழ்நாடு புத்தர் ஒளி பன்னாட்டு பேரவையின் இளைஞர்கள் பிரிவு சஞ்சய் மற்றும் அசிம் குழுவினர் மற்றும் செங்கல்பட்டு நகர் காவல்படையினர் பேருதவியாக இருந்தனர்.
செயலாளர் எழிலரசு, சமூகசேவகி வல்லம் பரஞ்ஜோதி, மற்றும் ஜெயசந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இந்த ஓட்டத்தின் மூலம் ஒரு நபர் 1 கிலோ மீட்டர் ஓடினால் இவ்வமைப்பின் மூலம் அவர்களின் பெயரில் சோமாலியா நாடுகளிலுள்ள ஏழைகளுக்கு ‘ஒரு கிலோ’ அரிசி வழங்கபடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பூமி வெப்பமயமாதலை தடுத்தல், இயற்கை பாதுகாப்பு, இயற்கை உணவுகளை உண்ணுதல், போன்றவற்றை வலியுறுத்தி , புத்தர் ஒளி பன்னாட்டு பேரவையின் தமிழ்நாட்டின் தலைவர் முனைவர் கீதாகுமாரி இந்த மினி மாரத்தான் (வெஜ்ரன்) நிகழ்வை சிறப்பாக நடத்தினார். இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு உற்சாகமாக ஓடினர். இவர்கள் அனைவருக்கும் புத்தர் ஒளி பன்னாட்டு பேரவை சார்பாக அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்