சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS” தொடர்ச்சியாக, G-5 தலைமைச்செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 23.06.2021 அன்று புரசைவாக்கம், பிரிக்ளின் ரோடு, திடீர் நகர், எண்.107 என்ற முகவரியில் உள்ள வீட்டை கண்காணித்தபோது,
அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மாவா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நாகவள்ளி, வ/37, புரசைவாக்கம் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 கிலோ மாவா புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.