சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உலகத்தை அச்சுறுத்தும் கொரானா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்தும் வகையில் காரைக்குடியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வை தேவகோட்டை சார் ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். காரைக்குடி வட்டாட்சியர், காரைகுடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.அருண், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிவகங்கை மாவட்ட செயலாளர் இனாயத்துல்லாஹ் Nஆ.ஹூசைன், தொகுதி அமைப்பாளர் காரை பஷீர், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா, பாரதிய ஜனதா கட்சி ஜோதி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நகர தலைவர் சித்திக், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் அப்துல் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர். உலக ஒருங்கிணைந்த மத நல்லிணக்கக் குழு இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி