கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 29.11.2019. மாவட்ட காவல்துறைக்கு தனியாக முகநூல் பக்கம் உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த முகநூல் பக்கத்தை முடக்க முயன்று அதில் காவல்துறைக்கு எதிரான தவறான தகவல்களை வெளியிட்டதோடு, காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தி பொது ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்துள்ளனர்.
இதனை செய்தவர்கள் தக்கலை அருகே கோடியூரை சேர்ந்த ஜெரூன் (38), வினிஷ், பிரைட் சிங், மற்றும் மார்சிலின் என்பது தெரியவந்தது, உடனே தக்கலை காவல் நிலைய தலைமை காவலர் குமாரின் புகாரின் படி காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருள் பிரகாஷ் அவர்கள் ஜெரூனை கைது செய்து u/s 353 IPC u/s 71 IT Act படி வழக்கு பதிவு செய்தார். ஜெரூன் மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு முகநூல் பக்கத்தின் அட்மின் ஆவார். மற்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.