திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையிலான தேர்தல் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு கூட்டம் இன்று (17.03.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
2024 – பாராளுமன்ற தேர்தல் வருகின்ற 19.04.2024-ம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை பாதுகாப்பான முறையில் வாக்குச்சாவடிக்கு எடுத்து செல்வது குறித்தும், வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று சிறப்பான பாதுகாப்பு வழங்குவது குறித்தும், வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஒப்படைப்பது தொடர்பாக தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.
அப்போது, பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.காயத்திரி, தனிப்பிரிவு ஆய்வாளர் திரு.P.ராஜா மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு ஆய்வாளர் திருமதி.T.ஸ்ரீப்பிரியா ஆகியோர் உடனிருந்தார்கள்.