திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் ஷிபா மருத்துவமனை இணைந்து காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன்., அவர்கள் காவல்துறையினர் அனைவரும் தங்கள் உடல் நலனை நல்லமுறையில் பேணிக்காக்க வேண்டும் எனவும் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொண்டு உடலைப் பேணிக் காக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
இதனையடுத்து திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சுப்பிரமணியன் அவர்கள் மேற்பார்வையில் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உடல் பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்த பரிசோதனை, எலும்பு தாது அடர்த்தி, ஹீமோகுளோபின் அளவு, ஆக்சிஜன் அளவு, இதய பரிசோதனை, வெரிகோஸ் மெயின் மற்றும் சிறுநீரக பரிசோதனை போன்ற பரிசோதனைகள் சிறப்பான முறையில் நடைபெற்றது.