திருவாரூர்: திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோவில் ஆழித்தேர் திருவிழா நடைபெற இருப்பதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் இன்று (16.03.2024) தேர் செல்லகூடிய நான்கு வீதிகளை சுற்றி முழுவதும் ஆய்வு செய்தும், போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்தும், வாகனங்கள் நிறுத்தும் இடம் குறித்தும் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.
அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.T.ஈஸ்வரன், திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.மணிகண்டன், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.காயத்திரி, திருவாரூர் நகர காவல் ஆய்வாளர், திருவாரூர் போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தார்கள்.