திருவாரூர்: 2024 – பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri.)., அவர்கள் தலைமையில் தேர்தல் சிறப்பு கூட்டம், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, அவர்களது பணிகள் குறித்து எடுத்துரைத்து தக்க அறிவுரைகள் வழங்கினார்கள்.
மேற்படி குழுவினர் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் (24X7) பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.ஈஸ்வரன் அவர்கள் உடனிருந்தார்கள்.