திருவாரூர்: திருவாரூர் மாவட்ட வலங்கைமான் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார். அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் வலங்கைமான், ஆண்டாங்கோவில், பெரியார் காலனியை சேர்ந்த அம்பேத்கார் என்பவரின் மகன் அருண்குமாருடைய வீட்டை சோதனையிட்ட போது எளிதில் தீ பற்றக்கூடிய உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய சுமார் 2 கிலோ வெடிப்பொருட்களை எந்தவித அரசு அனுமதியோ, உரிமமோ இல்லாமல் வீட்டில் வைத்திருந்தவரை கைது செய்து, வெடிப்பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.
சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார் அவர்கள் பாராட்டினார்கள்.