திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார் அவர்கள் உத்தரவின்பேரில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் படி, கடந்த 48 மணி நேரத்தில் ரவுடி வேட்டையில் 64 குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டது. அவர்களில் 09 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது
எதிர்வரும் 13.01.2023 வரை தொடர் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார் அவர்கள் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.