தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குநர் திரு. ராஜதுரை, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் I நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் திரு. முருகப்பெருமாள், தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் III நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் திரு.கண்ணன் , கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் II நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் திரு. ஆலன்ராயன், விளாத்திகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உதவி வழக்கறிஞர் திருமதி. ரேவதி, தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் திரு. சைலஷ், தூத்துக்குடி மாவட்ட இயங்கும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் திருமதி. கலாலெட்சுமி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் திரு.ராஜேஷ் கண்ணா ஆகியோரும், விளாத்திகுளம் காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரேயா குப்தா இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் திருச்செந்தூர் திரு. ஆவுடையப்பன், ஸ்ரீவைகுண்டம் திரு. மாயவன், மணியாச்சி திரு. லோகேஸ்வரன், சாத்தான்குளம் திரு. அருள், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு திரு. பொன்னரசு, மதுவிலக்கு அமலாக்க பிரிவு திரு. சிவசுப்பு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு திரு. ஜெயராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு திரு. சம்பத், மாவட்ட தனிப்பிரவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.