திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி அமைக்கப்பட்ட தனிப்படை போலிசார் மன்னார்குடி சக்தி மரவாடி ரோடு அருகே வாகன தணிக்கை செய்த போது, அவ்வழியே வந்த TN 68 L 5150 என்ற Nissan Sunny காரை சோதனை செய்த போது அதில் 19 மூட்டைகளில் மறைத்து வைத்திருந்த 161.600 கிலோ கிராம் எடை கொண்ட (மதிப்பு சுமார் இரண்டு லட்சம் ரூபாய்) Hans, Cool lip, Vimal Panmasala, VI-Tobacoo Panmasala ஆகிய அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. போதைப்பொருட்களை கடத்திய நபரை விசாரணை செய்த போது மன்னார்குடி அரிசி கடை சந்தை சேர்ந்த ஷேக் தாவுது மகன் ஹாஜா மைதீன் என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சிறப்பாக செயல்பட்ட மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.A.அஸ்வந் ஆண்டோ ஆரோக்கியராஜ் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார் அவர்கள் பாராட்டினார்கள்.