திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி – கொரடாச்சேரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு T.P.சுரேஷ்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சிவராமன் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டதில் மன்னார்குடி காரி கோட்டையை சேர்ந்த 1.பாலகுமார். கொரடாச்சேரி பகுதியை சேர்ந்த 2. அசோக் குமார். 3.பன்னீர். 4.சரவணன். ஆகிய நான்கு நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து நான்கு செல்ஃபோன் மற்றும் பணம் ரூ.3950/- ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர், காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.