விழுப்புரம்: பருவ மழை தொடங்கி இருப்பதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில்
மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படையில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படாத வகையில் வெள்ள தடுப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள தேவையான பொருட்கள் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தியதின் பேரில் இன்று மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படையில் வெள்ள பாதிப்பு உபகரண பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆயுதப்படை வளாகத்தில் லேஅவுட் செய்யப்பட்டிருந்த பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டார்.